
பிரித்தானியா லண்டன் Ealing ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரிஷான் உதயகுமார் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவு தந்து
நீண்ட தூரம் சென்றதேனோ?
கண்மூடி விழிப்பதற்குள் கனப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா - என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
விழி நீர் துடைக்கவும்
உன் கரங்கள் தான் இல்லையன்றோ...
வாழ்ந்த கதை முடியமுன்
இறந்திடவா
நீ பிறந்தாய்..! உன் வாழ்வு தொடங்கும் முன்
நீ எங்கே சென்றாய் தனியே..?
கண்ட பல கனவிலும்
வந்து வந்து போகுதடா...
எம் மடிமீது நீ தவழ்ந்த அந்த நாட்கள்
எம்முள் உயிரோட்டமாய் என்றும் இருக்கும்...
உமக்கோர் பிறப்பிருக்குமாயின் எம்மிடமே வந்துவிடும்...
மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை-எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய் எம் குழந்தாய்...
உன் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
ஈரவிழிகளுடன் உன் குடும்பத்தினர்...
Hi Risaan, You are a great cousin with a great sense of humour and a laugh that will never die as long as it still brings us joy and laughter. To everyone, you are a lasting memory of happiness and...