Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 MAR 1949
இறப்பு 26 NOV 2019
அமரர் ரெஜினா ஜோசபின் ஞானரஞ்சிதம் அல்பேர்ட் (ஞானம்)
ஒய்வுபெற்ற ஆசிரியை- St Sylvester's College Kandy, Vincent Girls’ High School Batticaloa, Paddiruppu Maha Vidyalayam Batticaloa
வயது 70
அமரர் ரெஜினா ஜோசபின் ஞானரஞ்சிதம் அல்பேர்ட் 1949 - 2019 கண்டி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Swindon ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரெஜினாஜோசபின் ஞானரஞ்சிதம் அல்பேர்ட் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்."
-யோவான் 11:25

ஆண்டு மூன்று போனாலும் அழியாது
 நம் சோகம் மீளாது எம் துயரம்
 மறையாது உங்கள் நினைவு
 ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ

எங்கள் வீட்டு நிலவாக
 ஒளி வீசி மகிழ வைத்தீரே
யார் கண்பட்டு மறைந்து போனீரோ
 தாமரை மலர் நீரில் ஆடுவதுப்போல
நாங்கள் உமைப்பிரிந்து
 தத்தளித்து மனம் ஆடுகின்றதே

நீங்கள் வாழ்ந்த இவ்வுலகில்
 எமை வாழவைக்க ஓயாதுழைத்து
இப்போ ஓய்வெடுத்துக் கொண்டீர்களே

நீங்கள் விட்டுப் போன வெற்றிடத்தில்
 எதை இட்டு நிரப்புவோம் அம்மா

கல்லைறைப் பூக்களோடு எங்கள்
கண்ணீரும் பூத்துக்கிடக்கிறது அம்மா

உங்கள் ஆத்மா சாந்தி அடைய தினமும்
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 02 Dec, 2019
நன்றி நவிலல் Mon, 06 Jan, 2020