

கண்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Swindon ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரெஜினாஜோசபின் ஞானரஞ்சிதம் அல்பேர்ட் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
II தீமோத்தேயு:4:7
நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன்,
விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
எங்கள் வீட்டு குல விளக்கே அம்மா
எமை விட்டு பிரிந்தது ஏனோ
அன்பின் நிறைவிடமே அம்மா
பாசத்தோடும் சிரித்த முகத்தோடும்
கண்ணின் இமை போல் எமை காத்து
துன்பம் துயரம் தெரியாது எமை வளர்த்து
தரணியிலே எமை உயர வைத்து
இன்பமுடன் நாம் வாழ வழிகாட்டி
எமை எல்லாம் ஆழாத்துயரில்
ஆழ்த்தி விட்டு சென்று ஆனதம்மா ஓராண்டு
ஓராண்டு காலமதில் உனை பிரிந்து
ஒரு நொடிப்பொழுதும் உனை மறவாமல்
நாம் வாழ்கின்றோம் எத்தனை ஆயிரம் உறவுகள்
எமை அணைத்திட இருந்தாலும்
அத்தனையும் எம் அம்மாவுக்கு நிகராகுமா?
ஆண்டுகள் பல ஆனாலும் ஆறாது எம் துயரம்
நீங்காது அம்மா எம் மனதில் உன் நினைவு
இன்னொரு பிறப்பு ஒன்று உண்டெனில்
உன் பிள்ளைகளாக மட்டுமே நாம் பிறந்திட வேண்டும் அம்மா!