2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
பிரான்ஸை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ரதீஷன் சதுஷன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை விட்டு நீ பிரிந்து
இரண்டு ஆண்டு சென்றது
மறைந்த உன் நினைவு மட்டும்
நெஞ்சில் மாறாமல் உள்ளது மகனே
ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலே
அழுகிறது இதயம் வெறுமையாகவே
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும் மகனே
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது.
உன் ஆத்மா
சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம் !!
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் - தந்தை
- Contact Request Details