2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசகுணம் தனபாலசிங்கம்
(ரவி)
உரிமையாளர்- தேவி மகால் உணவகம்
வயது 54
Tribute
38
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசகுணம் தனபாலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட
எங்கள் அன்பு தெய்வமே!
ஆண்டு இரண்டு கடந்தாலும்
உங்கள் நினைவுகளை
நிதம் நிதம் நெஞ்சில்
நினைத்து கண்ணீர் சொரிவதைத்
தவிர எம்மால் ஏதும் செய்ய
முடியவில்லையே அப்பா! .
எங்களின் நிறைவே
உங்களின் வாழ்வு என்றபடி
ஆனந்தமாய் அன்பு நிறைவுடன்
வாழ வைத்த உங்களை காலன்
அவன் கவர்ந்து சென்று எம்மை
கண்ணீர் சொரிய வைத்து விட்டான்...
ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உங்கள் நினைவுகள்
சுமந்து உங்கள் வழியில்
உங்கள் பிள்ளைகள் நாம்
என்றும் பயணிப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
எங்கள் பாசத்தின் சுடர் விளக்கே நீங்க எங்கே சென்று விட்டிர் இன்று நான்கு வருடம் சென்று விட்டது உமது முகத்தை பார்க்க கண்கள் தேடுகிறேன் காணவில்லை மீட்டும் வந்து எங்கள் குடும்பத்தில் பிறப்பிர் என...