Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 FEB 1927
இறப்பு 03 AUG 2021
அமரர் இராசையா செல்லம்மா 1927 - 2021 சரவணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி:10-08-2023
யாழ். சரவணைமேற்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், இணுவில் கிழக்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா செல்லம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஐயாவாகிய அம்மா பஞ்சபாண்டவராய் எம்மை
நெஞ்சினிலே நித்தம் சுமந்து
பஞ்சம் வராமல் பாதுகாத்த தாயே
நெஞ்சத்தில் என்றும் உன் நினைவுகள் தாயே

தந்தையின் பிரிவை உம் நெஞ்சத்தில் வைத்தீர்
தந்தையின் அன்பையும் சேர்த்து தந்தீர்
சிந்தை முழுவதும் எம்மை சுமந்தீர்
இன்று உம் நினைவுகளை சுமக்கின்றோம்

பிள்ளைகள் வாழ்வினை உயர்த்திவிட்டீர்
பிள்ளைகள் மகிழ்வினில் மகிழ்ந்திருந்தீர்
பிள்ளைகளுக்காகவே துன்பமும் சுமந்தீர்
பிள்ளைகள் அழுகின்றோம் அருகினில் ஏனில்லை தாயே

ஆண்டுகள் இரண்டு ஓடி மறைந்தன
ஆறவில்லை இன்னும் மனதில் துன்பம்
ஆண்டவனடியில் நித்தியமாய் வாழ
ஆத்மார்த்தமாய் பிரார்த்திக்கின்றோம் 

தகவல்: குடும்பத்தினர்

Photos