5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசையா குமாரசாமி
(குமாரு கல்வயல்)
வயது 81
அமரர் இராசையா குமாரசாமி
1938 -
2019
சாவகச்சேரி கல்வயல், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி:08/11/2024.
யாழ். கல்வயல் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா குமாரசாமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து நீண்டதூரம்
சென்று ஆண்டுகள் 5 கடந்தாலும்
அழியவில்லை உங்கள் நினைவுகள்
அகலவில்லை உங்களின் அன்பு முகம்..!
எங்களின் ஒவ்வொரு செயல்களிலும்
உங்களின் வழிகாட்டுதலை உணர்கின்றோம்
கந்தனின் கருணையினால் அவன்
கழல் பற்றிக் கொண்டீர்கள் - இனி
எப்பொழுது காண்போம் உங்கள் முகத்தை..!
நீங்கள் எம்மை வாழவைத்து
மகிழ்வித்த காலங்கள்
விட்டுச் சென்ற
ஞாபகங்கள்
தினமும் எமக்கு
கண்முன்னே திரைப்படமாக ஒடுகின்றன
இனனொரு உருவமாக இனிமேலும்
தொடருங்கள் எம்முடனே..!
தகவல்:
குடும்பத்தினர்