யாழ். கல்வயல் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா குமாரசாமி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-11-2023
நம்மை விட்டுப்பிரிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டாலும்-உங்கள்
விம்பம் இன்னும் எம் கண்ணைவிட்டு மறையவில்லை.
நல்வழிகாட்டிய உங்கள் பாதையிலேயே
நாம் இங்கே பயணிக்கின்றோம்.
அன்பான கணவனாய் பண்பான தகப்பனாய்
ஆரத்தழுவும் பேரனாய் ஆசை மாமனாய்
அனைவரின் உள்ளத்திலும்
ஆழமாக இடம் பிடித்தீர்கள்- இன்று
அணையாத தீபமாய் ஒளி வீசுகின்றீர்கள்.
கார்த்திகை மாதம் காத்திருந்து நீங்களும்
கந்தன் திருவடியே கதியென்று சென்றீர்கள்
நித்திரையில் நீங்களும் நிம்மதியாய் சென்றுவிட்டீர்கள்
நிர்க்கதியாய் நாமிங்கே நிலைகுலைந்து நிற்கின்றோம்.
மறுஜென்மம் என்றொன்று இருந்தால்
மறுபடியும் வந்துவிடுங்கள் எம்மிடமே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
உமையவள் மைந்தன் முருகனிடம்
உருகி வேண்டுகின்றோம்.