Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 24 APR 1938
விண்ணில் 03 NOV 2019
அமரர் இராசையா குமாரசாமி (குமாரு கல்வயல்)
வயது 81
அமரர் இராசையா குமாரசாமி 1938 - 2019 சாவகச்சேரி கல்வயல், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.


யாழ். கல்வயல் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா குமாரசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஆண்டொன்று அல்ல
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
அழியாது உங்கள் அன்பு முகம் எம் மனதிலிருந்து
அணையாத தீபமாய் எம் இதயங்களில் ஒளிர்கிறீர்கள்
மண்ணுலகை விட்டு மரணம் பிரித்தாலும்
மறையாத உருவமாய் எம்
மனங்களில் வாழ்கின்றீர்கள்- எம்
கண்ணுக்குத் தெரியாமல் கந்தனின் காலடியே
கதியென்று நீங்களும்
கவலையின்றி சென்றதேனோ? - அதனால்

கதறி அழுகின்றோம் நாம் இங்கே
ஆறுநாள் நோன்பிருந்து
ஆறுமுகன் அரவணைப்பில் நீங்கள்- ஆனால்
ஆற்றொணாத் துயரத்துடன் அழுது புலம்புகின்றோம் நாம்

இம் மண்ணை விட்டு சென்றாலும்
எப்பொழுதும் எங்கள் உள்ளத்தில் நீங்கள் வசிப்பீர்கள்
எங்கிருந்தாலும் எங்களை ஆசிர்வதிப்பீர்கள் என வேண்டி
காலமெல்லாம் நாம் இனி
கந்தஷஷ்டி நாளினிலே
உங்கள் நினைவுகளுடன்
பூக்களை காணிக்கையாக்குவோம்.. 

தகவல்: குடும்பத்தினர்