Clicky

நினைவஞ்சலி
மண்ணில் 24 APR 1938
விண்ணில் 03 NOV 2019
அமரர் இராசையா குமாரசாமி (குமாரு கல்வயல்)
வயது 81
அமரர் இராசையா குமாரசாமி 1938 - 2019 சாவகச்சேரி கல்வயல், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கல்வயலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கல்வயலை வதிவிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா குமாரசாமி  அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

கல்வயலில் கால் பதித்து களிப்புடனே எமை வளர்த்து 
கரு விழிக்குள் மறைந்திருக்கும் கனிவான அப்பாவே
கட்டடத் தொழில் செய்து கரிசனையாய் காத்து எமை 
கண்கலங்க வைத்து விட்டு கந்தனடி சேர்ந்தீர்கள் 

சிந்தையுடன் எமை வளர்த்து
சிறப்புடனே வாழ வைத்த - உம்மை 
விந்தைமிகு தந்தையென்றால்
வியப்பதற்கு ஏதுமில்லை 

ஊருக்கு உதவி உற்றார்க்கும் உறுதுணையாய்
பாரிசில் வந்தும் கூட பரிவுடனே பழகியவர்
பேரக்குழந்தைகளை பிரியமுடன் பாதுகாத்தீர்
விரைந்து தான் நீங்களும் விண்ணுலகம் சென்றதேனோ 

பாறைனை நாளன்று வேலனை தேடி நீங்கள் 
பாசமான உறவுகளை பரிதவிக்க விட்டீர்கள்
மறுஜென்மம் ஒன்றிருந்தால் - அப்பா!
மறுபடியும் வந்து விடுங்கள் எம்மிடமே...


எங்கள் குடும்பத்தலைவர் எங்கள் அப்பாவின் இழப்பின் செய்தி கேட்டு உடன்வந்து உதவியவர்களுக்கும் எங்கள் துயரத்தை பகிர்ந்த உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்களுக்கும் மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் இரங்கல் தெரிவித்தவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், தந்தையின் வாழ்விடமான கல்வயலில் நடைபெற்ற கண்ணீர் அஞ்சலி பிரார்த்தனையை ஒழுங்கு செய்தவர்கள், கலந்து கொண்டவர்களுக்கும், பல வழிகளில் உதவிய அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் வீட்டுக் கிருத்திய கிரியை 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் 34, Rue Jules Maily, 93700 Drancy, France எனும் முகவரியில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்