யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமச்சந்திரன் நேசலிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-01-2023
அன்பும் பாசமும் நேசமும் கொண்ட
எங்கள் அருமை அப்பாவிற்கு,
உங்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும்
உரித்தான அன்பு மனைவியும்
அருமைப் பிள்ளைகள் மருமக்கள்
ஆசைப் பேரப்பிள்ளைகள் எழுதும் அன்பு மடல்
ஆண்டு நான்று ஆனாலும் என்ன
முப்பது ஆனாலும் என்ன
உங்கள் நினைவு என்றுமே எங்களை விட்டு அகலாது...
என்றென்றும் நீங்கள்
எங்களோடு தான் இருக்கிறீர்கள்
உங்கள் ஆசீர்வாதங்கள் எப்பொழுதும்
எங்களை வழிநடத்திக் கொண்டு
இருப்பதை உணர்கிறோம்...
பிள்ளைகளின் வளர்ச்சியிலும்
செயல்களிலும் உங்களைக் காண்கிறோம்
அப்பா இன்னும் சிறிது காலம் இருந்து
பேரப்பிள்ளைகளின் வளர்ச்சியிலும்,
சந்தோசங்களிலும் பங்கு கொள்ளாமல்
போய் விட்டீர்களே...
என்றுமே எங்கள் மனது
உங்களை விட்டு அகலாது அப்பா
தெய்வமாக இருந்து எங்கள் எல்லோரையும்
ஆசீர்வதியுங்கள் அப்பா
உங்கள் ஆசி எப்போதும் எங்களை
வழிநடத்திச் செல்ல வேண்டும் அப்பா
என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும்
அன்பு மனைவி, அருமைப் பிள்ளைகள்,
மருமக்கள், ஆசைப் பேரப்பிள்ளைகள்...
We miss you Ammaappa. We always love you and you are always in our hearts.