2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 AUG 1944
இறப்பு 18 DEC 2018
அமரர் இராமச்சந்திரன் நேசலிங்கம்
யோகம் மருந்தக உரிமையாளர்- தருமபுரம்
வயது 74
அமரர் இராமச்சந்திரன் நேசலிங்கம் 1944 - 2018 எழுவைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமச்சந்திரன் நேசலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் ஆருயிர் அப்பா,
பாசத்துக்கும் நேசத்துக்கும் உறைவிடமான எங்கள் தந்தையே,
அப்பப்பா இராமச்சந்திரனும் அப்பம்மா
யோகம்மாவும் பெற்றெடுத்த முதல் முத்தே,
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து
இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதே!

ஏன் உங்களுக்கு இந்த அவசரம்?
மாலுமி இல்லாத, நங்கூரம் இல்லாத படகைப் போல
நாங்கள் தத்தளிக்கிறோம் அப்பா!
எங்களைத் தவிக்க விட்டு விட்டுப் பெருமாளைத்
தரிசிக்க வைகுண்டம் போனதேன் அப்பா?

பேரப்பிள்ளைகளின் நன்மைகளைப் பார்த்து
விட்டுப் போயிருக்கலாமப்பா?
நீங்கள் எப்பொழுதும் எங்களுடன் இருப்பதாகத்
தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம்..

நீங்கள் மேலிருந்து எப்போதும்
எல்லோரையும் வழிநடத்தி ஆசீர்வதிப்பீர்கள்
என்ற நம்பிக்கையுடன் என்றும்
உங்கள் நினைவுகளுடன் வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்..

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்