

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமச்சந்திரன் நேசலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் இருப்பிடமாய்
மாந்தருள் மாணிக்கமாய்
சகலகலா வல்லவனாய்
ஊர் போற்றும் உத்தமனாய் நேசலிங்கம்
என்னும் பெயருக்கு ஏற்றவாறு
எல்லோரிடமும் நேசமுடனும்
பாசமுடனும் வாழ்ந்த எமது
அருமை அப்பாவே
நீங்கள் எம்மை விட்டு
சென்று ஒரு வருடம்
முடிந்ததை எம்மால்
இன்னும் நம்பமுடியவில்லை..
அப்பா அம்மா தவிப்பது தெரியவில்லையா
உங்கள் பிள்ளைகள் நாங்கள்
எங்கள் அப்பாவை இழந்து
தவிப்பது தெரியவில்லையா
உங்கள் பேரப்பிள்ளைகள்
அம்மப்பா அப்பப்பா என்று
அழைப்பது கேட்கவில்லையே?
உங்கள் அருமை மருமக்கள்
மாமா என்று கூப்பிடுவது
கேட்கவில்லையா?
தெய்வத்துடன் கலந்து நீங்கள்
தெய்வமாக இருந்து எங்கள்
ஆசீர்வதிப்பீர்கள் என்று
எங்களுக்கு எப்பொழுதும் தெரியும் அப்பா
என்றும் மாறாத உங்கள்
நினைவுகளுடன்வாழும் ஆசை மனைவி
அன்புப் பிள்ளைகள் , சகோதரர்கள்
மற்றும் உற்றார் உறவினர்கள்நண்பர்கள்
We miss you Ammaappa. We always love you and you are always in our hearts.