7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னையா நவரட்ணம்
ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி, சில்வர் ஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகத்தின் மூத்த உறுப்பினர், விளையாட்டு வீரர்
வயது 85
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வட்டுக்கோட்டை அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அராலி, திருகோணமலை, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா நவரட்ணம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறையடி சேர்ந்து ஏழாண்டுகள் நீங்கியும்
நித்தம் நினைவில் நிற்கும் எங்கள் குடும்ப விளக்கு!
எம்மோடு இருந்து எம்மையெல்லாம் இயக்கி
எமக்கு வழிகாட்டி பாசமிகு தந்தையாய்
பண்புள்ள அன்பராய் வாழும் எங்கள்
இல்லத்தின் இதய தெய்வமே!
நாளும் பொழுதும் உன் நினைவால்
சொந்தம் அழுது உருகுதப்பா...
ஏழு ஏழு ஜென்மம் சென்றாலும்
உங்களின் எண்ணங்களும் செயல்களும்
எங்களுடனே பயணிக்கும் அப்பா
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.