1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னையா நவரட்ணம்
ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி, சில்வர் ஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகத்தின் மூத்த உறுப்பினர், விளையாட்டு வீரர்
வயது 85
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வட்டுக்கோட்டை அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அராலி, திருகோணமலை, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா நவரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களுக்கு உயிர் தந்து
காத்த அன்புத் தெய்வமே!
அப்பா நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து
ஆண்டு ஒன்று சென்றாலும்
எங்கள் நினைவில் எப்போதும் வாழ்கின்றீர்கள்
ஆயிரம் ஆண்டு தவம் இருந்தும்
கிடைக்கா உறவொன்று
இடை வழியில் சென்றதுவே!
வாழ வழிகாட்டிய தீபமொன்று
இடைவழியே ஒளி இழந்து நின்றதுவே!
பார் போற்ற மூவர் பெற்று விட்டு
பெற்றவர், மனைவி, உற்றவர் கண் குளமாக சென்றீரே!
கண்கண்ட பேரர்கள் கதறியழ
காணா இடம் சென்று மறைந்தீரே!
தேடுகிறோம் உமை கனவுகளில்
என்றும் சுமந்தபடி..!!
உங்கள் அன்பு மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.