யாழ். வட்டுக்கோட்டை அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அராலி, திருகோணமலை, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா நவரட்ணம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
மனைவியின் சமர்ப்பணம்
நான்கு ஆண்டுகள் ஓடிற்றோ?
உமை இவ்வுலகில் நாமிழந்து
வையத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும்
நீங்காமல் உம் நினைவு
என்னோடு நிறைந்திருக்கும்....
உங்களையே நினைக்கின்றேன்
உங்களுக்காக வாழ்கின்றேன்
கண்ணீரில் கரைகின்றேன்
கண்ணுறங்க மறக்கின்றேன்
என்னை நீங்கள் ஏன் பிரிந்தீர்கள்....
பிள்ளைகளின் சமர்ப்பணம்
ஆண்டுகள் நான்கு உருண்டோடி மறைந்தாலும்
அகலாது அப்பா உங்கள் அன்புமுகம்
எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
பார் போற்ற எங்களை வளர்த்தீர்கள்
கல்வியைக் கருத்தாய் கற்று உயர்ந்திட
கண்டிப்புடன் நற்கல்வி அளித்தீர்கள்
கண்ணினின்று நீர் வழிந்தோடி எம்மை
கலங்க வைக்கின்றதே அப்பா
காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்
வையகத்தில் நாம் வாழும் காலம் வரை
நெஞ்சத்தில் உங்கள் நினைவு நிழலாடும்
உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.
ஒம் சாந்தி! ஒம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
ஆறாத்துயருடன் அருமை
மனைவி,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.