Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 NOV 1933
இறப்பு 03 DEC 2018
அமரர் பொன்னையா நவரட்ணம்
ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி, சில்வர் ஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகத்தின் மூத்த உறுப்பினர், விளையாட்டு வீரர்
வயது 85
அமரர் பொன்னையா நவரட்ணம் 1933 - 2018 அராலி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டுக்கோட்டை அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அராலி, திருகோணமலை, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா நவரட்ணம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.  

குடும்பத்தின் குல விளக்கே
ஆண்டு ஆறு போனாலும்
உம் நினைவுகள் எம்மை
விட்டு அகலவில்லை!

உருக்குலைந்து மாய்கின்றோம்
வருடங்கள் ஆறு வந்திட்ட போதினிலும்
நம்ப மறுக்கிறதையா எங்கள் மனங்கள்!

வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது!

நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்