யாழ். வட்டுக்கோட்டை அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அராலி, திருகோணமலை, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா நவரட்ணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கு வரைவிலக்கணம் எது
என்று
ஆழ்ந்தபோது கண்முன்னே உங்களின்
பாசநினைவுகள் தான்!
தாங்கிப் பிடிக்கின்றன மனதை!
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகிறேன் உங்கள் முகத்தை
நூறு ஆண்டுகள் கடந்தாலும்
மறவேன் என் பாசத்திற்குரியவரை....
இனிய கணவராக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள்
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும்
ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள்.....
பாசத்தின் பிறப்பிடமாய்
தாலாட்டும் அன்னையாய்
சீராட்டும் தந்தையாய்
நீங்கள் வாழ்ந்த காலங்கள்
எங்களால் மறக்க முடியாது
ஆண்டுகள் ஐந்து ஆனாலும் அழியவில்லை
எம் சோகம் எத்தனை யுகங்கள் ஆனாலும்
உங்கள் நினைவு எம்மை விட்டு அழியாது!
ஆலமரமாய் எம்மைக் காத்த அன்புத் தந்தையே உங்களை
என்றென்றும் போற்றுகிறோம் எங்கள்
கண்களில் இருந்து நீங்கள் மறைந்தாலும்
ஆண்டு ஐந்து ஓடி மறைந்தாலும்
விழும் மழைத் துளியும் வீசுகின்ற காற்றும்
வாழுகின்ற காலம் வரை
உங்கள் நாமம் வாழும் ஐயா..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.....
There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.