3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 NOV 1933
இறப்பு 03 DEC 2018
அமரர் பொன்னையா நவரட்ணம்
ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி, சில்வர் ஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகத்தின் மூத்த உறுப்பினர், விளையாட்டு வீரர்
வயது 85
அமரர் பொன்னையா நவரட்ணம் 1933 - 2018 அராலி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டுக்கோட்டை அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அராலி, திருகோணமலை, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா நவரட்ணம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

மனைவியின் சமர்ப்பணம்

ஆண்டு பல உருண்டோடி விட்டாலும்
எம் இதயங்கள் இருண்டு தான் இருக்கிறது

உங்களையே நினைக்கின்றேன்
உங்களுக்காக வாழ்கின்றேன்
கண்ணீரில் கரைகின்றேன்
கண்ணுறங்க மறக்கின்றேன்

என்னை நீங்கள் ஏன் மறந்தீர்கள்
உங்கள் நினைவை ஏன் துறந்தீர்கள்
தூரத்து நிலவாக 
ஏன் தொலைந்து போனீர்கள்
எண்ணில்லா கனவுகளை என் மனதில் வளர்த்தீர்கள்
ஏக்கத்தில் தவிக்க விட்டு நீங்கள் எங்கே மறைந்தீர்கள்!!!

பிள்ளைகளின் சமர்ப்பணம்

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
மூன்று ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா

கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ! அப்பா
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!

எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உங்கள் கொள்கை எங்கள் வாழ்வில்
என்றும் மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அப்பா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்