
பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிறேம்சுதாகர் விதுஷன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி - 04.04.2025
ஆண்டுகளோ விரைந்தோடி எட்டு
என்பதை உணர்த்துகின்றது - மகனே!
மண்ணுள் விதையாய் வீழ்ந்து மறைந்தாயோ!
கண்பட்டதோ அறியேனடா - என்
கையை விட்டு தன்னந்தனியே நீ மட்டும் சென்றாயடா - விது
காலத்தின் கொடுமையால் கதி கலங்கி நிற்கிறோமடா
பதினெட்டு ஆண்டு வரை பண்பான மகனாய்
எம்மோடு நீ வாழ்ந்த வரைக்கும் கண்கலங்க வைத்ததில்லையடா - ஆனால்
நித்தம்
கண்ணீரோடு - நாம்
கதிகலங்கி வாழ்ந்திட வேண்டுமென பாதி
வழியில் எமை பிரிந்து சென்றாயா? மகனே!
என் உயிராய், உதிரமாய் என்றும் என்னை
வாழ்விப்பாய் என்றிருந்தேனே.. விது
காலனின் கைப்பிடிக்குள் கனவாய் கலந்யே
எட்டாண்டுகள் எம்மோடு நீ அருகிலிருந்து வாழவில்லையென்றாலும்
தொட்ட இடமெல்லாம் உன் தோற்றம் கண்டு வாழ்கிறோமடா...
எங்களது உறக்கத்தை தொலைத்து தினமும்
உயிரோடு நொந்து மடிகிறோமடா உன் நினைவால்.
எத்தனை ஆண்டுகள் எம்மை நீ பிரிந்தாலும்
உன் நினைவுகளோடு என்றும் நாம் இருப்போம்
உன் உயிரேனும் அமைதியாய் உறங்கட்டும்......
உன் ஆத்மா சாந்திக்காக
இறைவனை
தினமும் வேண்டுகிறோம்.
rest in peace