பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிறேம்சுதாகர் விதுஷன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாம் ஆண்டு நினைவினில்
மகனே விது !
ஆண்டுகள் ஐந்தானதே
மாண்டு நீயும் போயடா ;
கண்ட இடமெல்லாம் உன்
பண்பட்ட முகமே எங்கும் சிரிக்குதடா;
நீ போன நொடி முதலாய்
இந்த நொடி வரையில்
உந்தன் உருவைச் சுமந்த வயிற்றினிலே
உன் நினைவுகளைப் பிரசவிக்காமல்
சுமக்கின்றேனடா மகனே!
உன் ஆசைகள் கனவுகளை
வேரோடழித்து இவ்வுலகினிலே
உன்னை வாழவிடாமல் - உன்
ஜீவனை அழித்த பாவியோ - இன்று
ஆனந்தமாய் ஜனன விழாவினை
கொண்டாட - நாமோ
உன் நினைவுகளை எம்
மனதினில் சுமந்து கண்ணீர்
பூக்களால் அஞ்சலி செலுத்துகிறோமடா.
என் மகனே !
நீ எமை மறந்து மறைந்து போய்
ஐந்தாண்டுகள் ஆனதே ;
ஆனால்
இன்றும் வெறுமையோடு
உணர்ச்சிகளை உறவுகளைத் துறந்து
உயிருடன் இருக்கிறோமடா மகனே;
கண்ணீரை மட்டும் நாம்
சுமந்து வாழ வேண்டுமென்று
கண்மூடி நீ மறைந்து விட்டாய்;
காலமெல்லாம் உந்தன் கோலமுகம்
நினைவில் வர நிஜமோ எனத்
தேடுகின்றோம்- உந்தன்
அழகு முகத்தை நாமே.
ஆண்டுகள் பல கடந்தாலும்
எங்கள்
நினைவுகளில் நீ மட்டுமே
மங்கா உருவுடன் நிறைந்திருப்பாய்.
நிஜத்தில் நீ வந்து விட்டால்
நிம்மதியாய் நாம் இருப்போம்
எம் செல்வமே -----
உன் வரவுக்காய்
என்றென்றும் அன்போடு வழிமேல்
விழி வைத்து காத்திருப்போம் விது !
rest in peace