 
                    பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிறேம்சுதாகர் விதுஷன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு மகனே விது!
 நீ எமை பிரிந்து சென்று இன்றுடன் ஏழாண்டு போனதடா! 
கண்ணே தலை மகனே! 
எண்ணிலடங்கா கனவுகளுடன் நாளும் 
உன் வாலிபத்தின் வாழ்வுதனை - எண்ணி
 வளர்பிறையாய் இருந்தோமடா விது 
எல்லோர் மனங்களிலும் அன்பாய் அகம் மலரச் செய்தாயே 
பூமிக்கு வந்த வேலை முடிந்ததென்று - நீ 
பாதியிலே உன் பயணத்தை முடித்து விட்டாயோ மகனே! 
கண்ணிமைக்கும் பொழுதில் - நீ 
கண்மூடிச் சென்றாயோ, 
நான் கண்ணுறக்கமின்றி நாளும் அழுகின்றேனடா - என் 
நிலை கண்டு என்றடா எனைத் தேடி வருவாய் - என் செல்லமே 
கண்ணீர் நிறைந்த கண்களுடன் - உனைக் 
காணும் ஆவலுடன் காற்றில் அகப்பட்ட இலை சருகாய் 
அமைதியின்றி இவ்வுலகில் அழுகின்றேனடா - விது 
சற்றுமுனை மறக்க - மருந்தொன்றும் இல்லையடா - எமக்கு 
மண்ணில் போட்ட கோலமில்லையடா - நீ 
மனதில் பதித்த கோலமடா - என்றும் 
அழிந்துடாதடா உன் நினைவுகள் மட்டும் எம் வாழ்வினிலே 
காலங்கள் கண்ணீரோடு கரைந்து காற்றோடு கலந்து 
கனவாகிப் போய் இன்றுடன் வருடமோ ஏழாகிவிட்டதடா - மகனே 
ஏழாண்டென்ன? 
ஏழேழு ஜென்மங்கள் சென்றாலும் 
ஓயாமல் உனை தேடுவேன் - உன்னை 
நான் காணும் வரையடா - என் கண்மணியே 
உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேனடா மகனே.
அன்பு மகனே விது! 
நீ எமை பிரிந்து சென்று இன்றுடன் ஏழாண்டு போனதடா!
 
 
                     
         
             
                    
rest in peace