பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிறேம்சுதாகர் விதுஷன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
விதுஷன் என்னும் சுந்தர நாமம் கொண்டு- பார்
போற்ற தடம் பதித்து நற்சிந்தனையை- செயலில்காட்டி
தினம் வாழ்வில் நேர்மை கொண்டாயடா- உன்
அன்பு கொண்டு ஈசன் உயிரினை பெற்றுக் செல்ல
அந்தர நிலையில் நாங்கள் இன்று அழுகிறோமடா- விது
பதினெட்டு வயது பெற்றவர் தம்பி, தங்கை
நண்பர் சேரத்தாய், நல் விதையாய் வளர்கையில்
புல்லுருவிக் கொடி படர்ந்து உன்னுயிர் காவியதோ?
கனி கொய்யச் சென்ற போது- உன்
காலில் கருநாகம் சுற்றியதோ- காலம்
தாண்டுகையில் காலனவன் மானிட உருக்கொண்டு- உன்
உயிர் பறித்ததேனடா- மகனே
கண்ணுக்குள் இருந்து கண்மணியாய் ஒளிர்கிறாய்
நெஞ்சுக்குள் கிடந்து நொடிக்கு
நொடி அழைக்கிறாயடா மகனே
பாலகனாய் நீ கற்ற பள்ளியில் நீ துள்ளி ஒடுவதும்
நிற்பதுமாய் நிறைந்த இடமெல்லாம் மறையவில்லையடா
இன்று நீ கொடுத்த ஏக்கம் என்றும் மறையாதடா விது
உன் நிழல் என்னும் ஓயாமல் தொடர்கிறதே- நீ
மட்டும் என்னுள் இல்லாமல் என்னை
தனிமையாக்கி விட்டாயடா மகனே
ஆராண்டு ஆனதடா உன்னை தொலைத்து
எத்தனை வருடங்கள் ஓடினாலும்
எம் மனம் ஏற்கவில்லை- உன்
மறைவை மகனே- விது
ஆத்மா சாந்திக்காக அனைவரும்
இறைவனை வேண்டுகிறோம்
rest in peace