பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிறேம்சுதாகர் விதுஷன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலம் கனிய காத்திருந்து உன்னை கையில் எடுத்தேனடா - அன்று
பிறப்பிற்கும் இறப்பிற்கும் வெகுதூரம் இல்லையென்று - உன்
மரணம் கூறியதடா - இன்று.
அன்பிற்கு பணிவாய் பண்புக்கு பொருளாய்
நட்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தாயே.
கண்ணுக்கு கண்ணாய் வளர்ந்த நீ
காற்றில் கரைத்து கனவாகி போனதேனடா ?
உதிரத்திலும் உயிரிலும் கலந்த - உன்
உடன்பிறப்புக்களை தவிக்க விட்டதேனடா ?
எம் வாழ்வில் ஒளி தந்த நீ - நொடிப்பொழுதில்
வானவில்லாய் மறைந்ததேனடா?
வலிசுமந்து நிலைகுலைந்து தனிமையில்
வாடும் எமக்கு இவ்வுலகில் எதுவும்
எந்த உறவும் பெரிதல்லடா மகனே....
நிலையில்லாத இவ்வுலகில் நிஜமாக
வாழ்ந்த வாழ்வு - இன்று
கானல் நீரானதேனடா - விதுவாழ்க்கை
என்னும் பயணத்தை பாதி வழி கடந்துசெல்வதற்குள்
காலக்கொடியவன் கண்வைத்து
உன்னுயிரை வேளை வருமுன்
பறித்து வருடமோ மூன்றாகிவிட்டது
அதன் வலியோ எமக்கு ஆயுள் வரைதொடர்கிறது ...............
ஆண்டவன் பாதத்தில் அமைதியாக துயில் கொள் அன்பு மகனே.
rest in peace