Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 21 JUL 1998
மறைவு 03 APR 2017
அமரர் பிறேம்சுதாகர் விதுஷன்
பொருளியல் கல்லூரி மாணவன்-Lycee Jeanne d'Albret
வயது 18
அமரர் பிறேம்சுதாகர் விதுஷன் 1998 - 2017 பிரான்ஸ், France France
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிறேம்சுதாகர் விதுஷன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

கறைபடியா தூயவாழ்வில்
சிட்டாகச் சிறகடித்து இன்பமுடன்
வாழ்ந்த அன்பு மகனே விது!
உன் மென்விரல்கள் தொட்ட பொருட்கள்
நீயின்றி மெளனித்துப் போனதடா!
உன் அழகு ஆடையெல்லாம் மடிப்போடு
மடிந்து உன்னைத் தேடுதடா விது!

அதிகாலையிலே கருநாகமெனவந்த பாவி
தன் பெயருக்கு எற்றாற்போல்
ஈனச்செயலால் இரக்கமின்றி உன் ஜீவனை
காவுகொண்டதேனடா!
சதிகாரப்பாவி பிறந்தநாள்
கொண்டாட கறைபடியா உன்னுயிரை
கப்பமாக்கிவிட்டு கதிகலங்கி நிற்கிறோமய்யா!

உன்னுடன் கூடிவிளையாட மனம் ஏங்குதண்ணா!
எங்களை அரவணைத்து வழிகாட்ட
நீயில்லையே எமக்கினி..
உன்னுயிர்த் தோழன் தினமும்
நினைவாய் உயர்வுக்கான வழிகாண மனமின்றி
தவிக்கும் அவலம் அறிவாயா? மகனே!
எம் துக்கங்கள் இன்னும் தூங்கவில்லையடா மகனே!
தொடர்கிறது இரண்டாமாண்டு நினைவஞ்சலி!!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos