யாழ். கொழும்புத்துறை புங்கன்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், Qatar Doha வை வசிப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளம் இராசதுரை வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் வசந்தகுமார் அவர்கள் 03-08-2019 சனிக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பரராஜசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இ.வ வில்வராஜா(பிரபல நொத்தாரிசு- சட்டத்தரணி) பங்கஜம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுலோச்சனா அவர்களின் அன்புக் கணவரும்,
மீரா(மருத்துவர்- திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை), குமணன்(பான் ஏசியா வங்கி- வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயக்குமார், சாந்தகுமார், உதயகுமார், கௌரிதேவி, சுரேஸ்குமார், பிரேம்குமார், சதீஷ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்ஷினி, ஜெயராஜன், மஞ்சுளா, கவிதா, ஜெயசோதி, ரோகிணி, வசந்தி, லோகசிவம், சுகுணா, பிரியா, சுமந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மயூரி, பிரதீபன், கஸ்தூரி, அனோஜன், ஆரணி, நிரோஷன், ஆரபி, அஜந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
வைஷ்ணவி, காலஞ்சென்ற ஷைணவி, சுரண்யா, பிரவீன், ரம்யா, கீர்த்திகா, கிஷான் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கஜனி, சிவாகுகன், சுஜனி, ஸ்ரீகரன், நிஷாரா, மினோஷா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அண்ணா உங்கள் இழப்பை இன்றுவரை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை ... I will always miss you 😢