4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நித்திலன் விக்னராஜா
(நித்தி)
வயது 49
Tribute
21
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நித்திலன் விக்னராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நாட்கள் தானே...!
எப்படியோ நகர்ந்து போனது!
நாங்கள் மட்டும் அப்படியே உறைந்து போனதேன்..?
நான்கு வருடம் கடந்ததென்று தேதி சொல்லுது
உறங்க சென்ற நீ மட்டும் எழும்ப மறந்ததேன்!
நிழல்போல் இருந்தவன் நீ
நினைவாய் மாறினாய்
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியானாய்!
இதயங்களெல்லாம் நொறுங்க
இமைகளெல்லாம் நனைய
எங்களைத் தவிக்கவிட்டு எங்கோ நீ பயணமானாய்...!
காற்று வந்து காதில் ஏதோ சொல்லிப் போகுது
பார்க்கும் இடமெல்லாம் உன் குரலே கேட்குது
கடந்தகாலம் எங்களிற்கு கனவாய் போனது
எதிர்காலம் இப்படியேன் இருட்டாய் ஆனது?
எப்பொழுதும் இக்கேள்வியுடன்
ஆறாத்துயருடன் வாழும்
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்
அன்புத்தம்பி நித்தி உனை, உன்செயற்பாடுகளை, காலம்நேரம்பார்க்காமல் யார்எவர்என்றுபார்க்காமல் எல்லோருக்கும் உதவும் மனிதத்தை , உன்முகத்தில் தவழும் மங்காத புன்னகையை , எல்லோருக்கும் உதவுவதற்க்காக...