முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நித்திலன் விக்னராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்களை இமை காப்பது போல
நாம் காத்து வந்த எம் செல்ல மகனே!
வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய் என
வாஞ்சையுடன் நாங்கள் கண்ட கனா ஏராளம்
அத்தனையும் நீ கனவாக்கி எங்கு சென்றாய் ஐயா!
கண்மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதில் நடந்தவைகள்
நிஜம் தானா என்று நினைக்கும் முன்னே
மறைந்தது ஏனோ?
அன்பான உன் உள்ளமதில்
ஆசை மொழி வார்த்தை
இவையெல்லாம் நாம்
இழந்து தவிக்கின்றோம்
நினைக்கின்ற வேளையில்
நெஞ்சம் வெடித்து தவிக்கின்றோம்
நீ வான் உயரம் தெய்வத்தில்
ஒன்றாகி நின்று எமையெல்லாம்
பார்த்திடுவாய் என எண்ணி நினைவு நாளில்
விழியருவியாய் ஏங்கியே
நிற்கின்றோம்
உனைப் பார்த்து
உந்தன் ஆத்மா சாந்திபெற இறைவனைப் பிரார்த்திகின்றோம்..
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
என்னுடன் பிறந்தவனே
என்னருமைச் சகோதரனே !
உன்னைத் தேடி என் கண்கள் களைத்ததடா...
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன எம் உடன்பிறப்பே
ஆண்டுகள் மூன்று ஆனதடா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உன் போல் ஆகிடுமா
வாழ்ந்த கதை முடியமுன்
இறந்திடவா நீ பிறந்தாய்
உன் வாழ்வு தொடங்கும் முன்
நீ எங்கே சென்றாய் தனியே
மூன்று ஆண்டு என்றாலும்
பல ஆண்டு சென்றாலும்
உன் பிரிவை ஏற்கவில்லை எங்கள் மனம்
என்றும் உன் நினைவுகளுடன் நாம்
பிறந்து விட்டோம் இம்மண்ணில்
இறுதிவரை வாழ்வோம் நீ
விட்டுச் சென்ற நீங்காத நினைவுகளோடு... !
அன்புத்தம்பி நித்தி உனை, உன்செயற்பாடுகளை, காலம்நேரம்பார்க்காமல் யார்எவர்என்றுபார்க்காமல் எல்லோருக்கும் உதவும் மனிதத்தை , உன்முகத்தில் தவழும் மங்காத புன்னகையை , எல்லோருக்கும் உதவுவதற்க்காக...