யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஐயனார் கோவில் வீதி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லம்மா சற்குணசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 07-05-2023
அன்பினை பாலோடு கலந்தூட்டி
எங்களை ஆளாக்கி விட்டவள்
இன்னமுதம் தந்து
தினம் இமை போல் காத்தவள்!
ஈவிரக்கம் கொண்டு உள்ளத்தில்
கருணையின் ஊற்றாய் நிறைந்தவளின்
நினைவகலா ஓராண்டு நினைவு நாள்!
எண்ணும் எழுத்துமாய்
எம் கண்ணிரெண்டில் இருப்பவள்
ஏற்றம் தரும் வாழ்விற்கு
ஏணியாய் நின்றவள்!
ஐயம் இட்டு
அனைவரையும் ஆதரித்து,
ஐயமகல அறிவுரை சொல்லிய
எங்கள் ஆருயிர் அம்மாவின்
நினைவகலா ஓராண்டு நினைவு நாள்!
அன்னவளின் ஆத்மா
தெய்வத்தின் திருவடியில்
இரண்டறக் கலந்து
சாந்தி பெற
கைகூப்பித் தொழுகின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. Sivanandan family