நன்றி நவிலல்
தோற்றம் 16 NOV 1928
மறைவு 19 APR 2022
திருமதி நல்லம்மா சற்குணசிங்கம் (புவனேஸ்வரி)
இளைப்பாறிய ஆசிரியை(யாழ்/ தட்டாதெரு இந்து தமிழ் கலவன் பாடசாலை))
வயது 93
திருமதி நல்லம்மா சற்குணசிங்கம் 1928 - 2022 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஐயனார் கோவில் வீதி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா சற்குணசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

கண்ணிமைக்கும் பொழுதினிலே
 காலனவன் காற்றாய் கொண்டு சென்றதென்ன
முப்பத்தொரு நாள்ஆனபோதும்
ஆறுமோ எம்துயரம் ….

அம்மா …அம்மா …. அம்மா…. என்ற
சொல்லுக்கே ராணியம்மா நீ
 கண்ணீரில் கரைகின்றோம்
 காலங்கள் கடந்தாலும் கரையாது
உன் நினைவுகள் அன்புத்தாயே!

முப்பத்தொரு நாள் ஆனாலும்
 துவண்டுநிற்கிறோம் உம் விழி தேடி !
 எம் உயிருடன் ஒன்றாய்
 கலந்து விட்ட எங்கள் தெய்வமே !

உங்கள் ஆத்மா சாந்திக்காக
 இறைவனைப் பிரார்த்திக்கிறோம்…

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 22-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடைபெறும் பிரார்த்தனையிலும் மதியபோசனத்திலும் கலந்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். 

இங்ஙனம், மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Tribute 41 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.