

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஐயனார் கோவில் வீதி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லம்மா சற்குணசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 15/04/2025
ஆண்டுகள் மூன்று அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கின்றதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?
தந்தையாய் தாயாய் நற்தெய்வமாய்
நயந்து என்றும் எம்மை நீர் பாதுகாத்தீர்
வற்றாத ஊற்றெனவே சுரக்கும் அன்பால்
வகையுணர்த்தி வாழ்வளித்து சுகமே தந்தீர் அம்மா!
சட்டென்று அம்மா என்று அழைத்திட
உங்கள் அன்பும் காணவில்லை அம்மா
இதயத்திலிருந்த விளக்கும் அணைந்தது அம்மா!
எங்கள் வீடும் இருண்டது
காற்றும் நின்றது கனவுகள் கலைந்தது
மலை சாய்ந்தது!
சாவும் இன்னொருசரித்திரம் கொண்டதம்மா
அழுகின்றோம்.. அழுகின்றோம்...
அழுதுகொண்டே இருக்கின்றோம்!
அன்புடன் அழைக்க நீ இங்கிலையம்மா
எதிர்காலம் இருளில் அமைந்ததே
வழியொன்றும் காணவில்லையம்மா!
எங்கள் இதயங்கள் இன்றும் உங்களது நினைவுகளில்
விழிகளில் கண்ணீருடன் உங்களை தேடச்செய்கின்றதம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி பிரார்த்திக்கின்றோம்!!
My sincere condolences to you and your family for your loss.