யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி உருத்திரபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சண்முகநாதன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 28.07.2024
குணமென்றால் குளிரும் நெஞ்சம்!
கொண்டாடி நாம்மகிழக் கிடைத்த செம்மல்!
குணவாளன் குணமென்னும் குணத்திற் கேற்ப
பண்போடும் பணிவோடும் வாழ்ந்தே இந்தப்
பார்மீது நற்பெயரை எடுத்தார் இன்னும்
எண்ணத்தில் வாழ்கின்ற எங்கள் சொந்தம்!
இணையற்றோன்! இங்கினிக்கப் பேச வல்லோன்!
மண்மீதும் மக்களெங்கள் மக்கள் மீதும்
மட்டற்ற அன்புகொண்ட ஈர நெஞ்சன்!
இங்கெங்குச் சென்றாலும் வாழ்வார் நல்ல
இதயங்கள் உள்ளவரை உயிரோ டென்றும்!
திங்கள்போல் நாமுணர்வோம்! மகிழ்வோம்!இன்னும்
தேடிடுவோம் அம்முகத்தை! எம்மின் காதல்
மங்காது! மறையாது! மரண மென்னும்
மாயவலை வீழ்ந்தாலும் மனத்தி ரைமுன்
தங்கமென வேயொலிப்பார் உறவோர்க் கெல்லாம்
தன்னையுமே தந்திட்ட காதல் மன்னன்!
பெண்ணொன்று ஆண்நான்கு பிள்ளைச் செல்வம்
பேரின்ப வாழ்விற்கோர் எடுத்துக் காட்டு!
கண்ணாகத் தான்வளர்த்தார்! மனையாள் மீதும்
காலமெல்லாம் கொள்காதல் காவி யம்தான்!
அண்ணார்ந்து நாம்பார்ப்போம் உணவு தந்து
அகம்மகிழும் அவர்போக்கும் அதிச யம்தான்!
உண்ணுங்கள் உண்ணுங்கள் என்றே நிற்பார்
ஊரார்க்கும் உறவோர்க்கும் குணத்தார் தெய்வம்!
தெய்வங்கள் வந்துதிக்கும் இவர்போல் என்றும்
தேன்சொட்டத் தான்பேசும் மறையும் ஓர்நாள்
மெய்யாக இப்புவியில் அவத ரிக்கும்!
மேதினியில் இவையென்றும் மாறா திங்கே!
உய்யவழி காட்டுமவன் உயிர்கொ டுப்பான்!
உத்தமனார் மறுபிறப்பை ஏற்பார்! இங்கே
செய்கின்ற தானதர்மம் செழிக்க யாண்டும்
சண்முகநா தனாரையேநாம் வேண்டி நிற்போம்!
ஓம்சாந்தி
மனைவி
பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்