யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சண்முகநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
தோள் சுமந்து நடந்தவரே....!
வரும் தோல்வியெல்லாம் எதிர்த்து வேள்வி செய்து வளர்த்தவரே.....!
கால்வலித்தும் கண்வலித்தும் ஓய்வெடுக்காது உழைத்தவரே......!
உலகமெல்லாம் நாம் உயர்ந்து எரிய - உருவத்தையே எமக்காய் கரைத்தவரே.....!
இன்று கண் மூடிய பின்னும் கவிதையாய் சிரிக்கின்றீர்
விண் கேட்க அழுகின்றோம் ஏன் மௌனமாய் இருக்கின்றீர்
சின்ன சின்ன ஞாபகங்கள் எல்லாம்
பெரும் மழையாய் பொழிகிறது
அள்ளி அணைத்த பூக்கரங்கள்
ஏன் இன்று விறகுகளாய் கிடக்கிறது
சொல்லி சொல்லி வளர்த்த கதைகள்
மனதுக்குள்ளே பேரொளியாய் ஒலிக்கிறது
கிள்ளி கொஞ்சும் உங்கள் கிளி பேச்சு
இன்றேன் மௌனமாய் வலிக்கிறது
உயிர் கொடியில் பூக்க வைத்து - பயிர் கொடியை
பிள்ளை போல் சிரிக்க வைத்து
ஊர் வாழ்வை அலங்கரித்து உலகெல்லாம் சிறக்க வைத்து
பார் போற்ற வாழ்க்கையிலே - பரமனடி சரண் அடைந்ததேனோ
ஒவ்வொரு செயலிலும் உங்கள் முகம் தெரிய
ஒவ்வொரு நிகழ்விலும் உங்கள் அகம் ஒளிர
ஒவ்வொரு கணமும் நேற்று வரை ஒளிமயமானதே.....!
ஒவ்வொரு நொடியும் கண்ணீர் கரைய
ஒவ்வொரு உறவும் உங்கள் கதைகளை நிறைக்க - இன்று
உயிரை கண்ணீர் கடத்தி போகிறதே
உயிருக்குள் தீயை கொளுத்தி போகிறதே....!
திருவிழாவில் நாயகனாய்
எங்கள் பெரும் வாழ்வில் போதகனாய்
மருமக்கள் மனதில் ஆலயமாய்
பேரர்கள் உணர்வில் ஆனந்தமாய்
ஊரார் உற்றார் உறவில் உற்சவமாய்
வாழ்ந்த எங்கள் வரலாறே......!
நித்திய வாழ்வில் நிறைந்த ஓய்வு பெற்று
சத்திய சிவனின் சக்தியில் முக்தி பெற்று
பக்தி மார்க்கத்தில் பவளக் குழந்தையாய் மீண்டும்
பிறந்து - நாங்கள் சுத்தி வந்து தோளேற வேண்டும்
உங்களில் அமர்ந்து ஆதலால் அப்பாவே - காத்திருப்போம்
அதுவரை ஒவ்வொரு நாளும் பூவாய் பூத்திருப்போம்.
உங்கள் பிரிவால் உயிர் தொழும்மனைவி,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!