Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 03 FEB 1947
உதிர்வு 17 JUL 2017
அமரர் நடராசா சண்முகநாதன் (ஓமான்குணம்)
வயது 70
அமரர் நடராசா சண்முகநாதன் 1947 - 2017 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சண்முகநாதன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி 01-08-2021

நேற்றுப் போல் இருக்கிறது நீங்கள் சிரித்தபடி எமை அணைத்த கணம்
காற்றுப் படவே வலிக்கிறது எம் முன்னே
கண் மூடி மறைந்த தினம்
ஊற்றுப் போல் சுரக்கிறது - நீண்ட கால ஞாபகத்தின் கிணறு
தோற்றுப் போகிறோம் - உங்கள் முன்
நாம் எல்லாம் விறகு
நீங்கள் மட்டுமே எங்கள் ஆயுளின் சிறகு!

எல்லா திசைகளிலும் தெரிகிறது கதிரவனின் ஒளி
எல்லா இசைகளிலும் கேட்கிறது உங்கள் ஒலி
எப்புறம் திரும்பி உறங்கினாலும் இதயத்தில் வலி
ராஜ ராஜ கோபுரமாய் உயர்ந்தது அல்லவா
உங்கள் அன்பின் மொழி!

எப்போதும் உங்கள் நினைவுகளே - எங்கள் ஒளிச்சுடர்கள்
இப்போதும் பூக்கிறது ஆயிரமாயிரம் ஞாபகங்கள்
முப்பொழுதும் கேட்கிறது ஆலய மணி ஓசையாய் உங்கள் தேன் குரலிசைகள்
ஆயுள்வரை வேண்டுவோம்- ஐயனே.. மீண்டும் வரமாக- எங்கள் கரமாக

உங்கள் நினைவோடு வாழ்ந்திடும்
அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்