Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 03 FEB 1947
உதிர்வு 17 JUL 2017
அமரர் நடராசா சண்முகநாதன் (ஓமான்குணம்)
வயது 70
அமரர் நடராசா சண்முகநாதன் 1947 - 2017 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சண்முகநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஆண்டுகள் மூன்றானாலும்
உங்கள் பூமுகம் தான்
எங்கள் ஒளி விளக்கு

நூறாண்டுகள் கடந்தாலும்
எங்கள் குலத்துக்கு
நீங்களே கலங்கரை விளக்கு
நீங்கள் இல்லாமல் வெளுக்கவில்லை
எங்களுக்கான கிழக்கு
நாளும் நாளும் நினைத்து உருகுகிறோம்
நம்மவர்க்கு நீங்களே திரு விளக்கு

வாழும் காலம் எல்லாம் வசந்தத்தை பொழிந்தீர்கள்
தாழும் போது எல்லாம் தாயாய் தாங்கி வளர்த்தீர்கள்
நாளும் பொழுதும் நமக்காக கரைந்தீர்கள்
நல்வாழ்வில் இளைப்பாறி சுகம் காண்கையில்
இறைவனுடன் கலந்தீர்கள்

வேராகயிருந்து எமை பூவாக்கி மகிழ்ந்தவரே
வேறாக பிரியாது - ஊர் உறவெல்லாவற்றையும் தேராக்கி மகிழ்ந்தவரே
தேகத்தை கரைத்து மேகமாய் பொழிந்தவரே
நேசத்தை மட்டும் விதைத்து- எல்லோர் நெஞ்சமெலாம் நிறைந்தவரே

நேற்றுப் போல் இருக்கிறது- கூடி மகிழ்ந்த பொழுதுகள்
காற்றுப் படவும் வலிக்கிறது- நீங்கள் கண் மூடிய தருணங்கள்
நீர் ஊற்றுப் போல் திறக்கிறது- நீங்காத நினைவுகள்
நிலையற்ற வாழ்க்கையிலும் நிலைத்ததுவே உங்கள் தியாகங்கள்

போற்றி போற்றி பாடுகிறோம் ஐயனே
உயிரில் தீபம் ஏற்றி வணங்குகிறோம் மெய்யனே
தேற்றி கொள்ள வழிகள் இல்லை ஐயனே
தேம்பும் எங்களுக்கு ஆறுதலாய் வந்து அருள் தருவாய் ஐயனே

மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.  

தகவல்: குடும்பத்தினர்