Clicky

தோற்றம் 05 FEB 1955
மறைவு 27 OCT 2020
அமரர் நடராஜா ஹரிகரன் (கரன்)
வயது 65
அமரர் நடராஜா ஹரிகரன் 1955 - 2020 வேலணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

முகுந்தன் பிரான்சு 08 NOV 2020 France

ஆழ்ந்த இரங்கல்! பூரிக்கும் புன்முறுவலோடு பழகும் நற்பண்புடைய நண்பர் கரன். கரம்பன் கிராமத்தில் பொது விபரங்கள் அறியத் தொடங்கிய பதிம வயதுக் கால நட்பாக இருந்தது. நண்பர் - நண்பர்களின் நண்பர் என விரியும் கல்லூரிக் கால நட்புக் குழாம் அது. இக் குழாமிலிருந்து முதலில் வெளிநாடு பயணத்தவர்களில் கரனும் ஒருவாராக இருந்தார். 70களின் கடைசிக் காலத்தில் கப்பலில் பணியாற்றச் சென்றிருந்த இவர்களின் நேரடி அனுபவங்களூடாகவே மேற்கத்தேய நாடுகள் பற்றிய அறிமுகம் எமக்குக் கிடைத்திருந்தது. ஆனால் அப்போது நாமும் வெளிநாடுகளுக்குச் செல்வோம் என நினைத்தே இருக்கவில்லை. இலங்கையில் வெடித்துக் கிளம்பிய பேரினவாத வன்முறையால் தூக்கி விசிறப்பட்டவர்களாகி புவியெங்கும் பரவியநிலையில் வாழ்வைத் தொடர்கிறோம். இளம்பிராயத்தில் அமைந்த நட்புக் குழாம் கால நீட்சியில் தொலைவில் தொலைவுற்றதாய்ப் போனதை இவர் காலமாகிய துயர் தகவல் கிடைத்தபோது உணர முடிந்தது. 'நேற்று இருந்தான் இன்று இல்லை' எனக் காலம் கடந்து செல்கிறது. பிறப்பும் - இறப்பும் இயற்கையின் நியதி எனும் கோட்பாட்டை மனதில் நிறுத்தி எமது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்கிறோம்! இவரது பிரிவுத் துயரில் மௌனமாய் சங்கமிக்கிறோம்! - முகுந்தன் (பிரான்சு) (கரம்பன் கந்தையா மாஸ்டர் குடும்பம் )