2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நடராஜா ஹரிகரன்
(கரன்)
வயது 65
Tribute
77
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், ஜேர்மனி Hamburg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா ஹரிஹரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு நிறைவு
ஆறாத்துயரத்தில் மனது
ஆலமரம் போல் பெரிய நிழல் தந்தீரே
பாலைவனம் நடுவே
பரிதவிக்கவிட்டுச் சென்றதேனோ?
நித்தம் உங்களை நினைக்கின்றோம்!
நீங்கள் எம்மோடு இருப்பது போல்
உணர்கின்றோம்!
எம் நெஞ்சமதில்- உங்கள்
நினைவுகள் நிலையானவை…!
உங்களைப் பிரிந்து ஈராண்டு ஆனபோதும்
உங்களை மறவா நினைவுகளுடன்
ஈடு செய்ய முடியாத பேரிழப்பால் தவிக்கும்
மனைவி, பிள்ளைகள், மருமகன், சகோதரர்கள்,
மைத்துனர்கள், மருமக்கள், பெறாமக்கள், உறவினர், நண்பர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்