5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நடராஜா ஹரிகரன்
(கரன்)
வயது 65
Tribute
77
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், ஜேர்மனி Hamburg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா ஹரிஹரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
காலங்கள் கடந்து போகும் ஆனால்
கண்மணியே அப்பா உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அப்பா...!
இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்