3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராஜா ஹரிகரன்
(கரன்)
வயது 65
Tribute
77
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், ஜேர்மனி Hamburg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா ஹரிஹரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று ஆகிவிட்டது அப்பா!
நீங்கள் எங்களை நிரந்தரமாய்
பிரிந்து சென்று உங்கள் நினைவுகள்
எங்கள் கண்முன்னே நிழலாடுகிறது!
உங்கள் அன்பும் அரவணைப்பும்
கண்டிப்பான பேச்சும் மீண்டும் வேண்டும்
என உங்களைத் தேடுகின்றோம் அப்பா!
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா!
உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
உங்கள் மனைவி பிள்ளைகள்!!
தகவல்:
குடும்பத்தினர்