திதி: 09-01-2026
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகானம் தங்கக்குட்டி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து சென்றதம்மா...
உங்கள்
ஆனந்த முகங்கண்டு
சாந்தமான உங்கள் சொல்கேட்க
ஆவலாய் நின்ற எம்மை
ஏமாற்றி மறந்ததேனோ?..
இற்றுவிடா இனிய வாழ்வை எமக்களித்து
அதில் நீங்கள்...அற்றும்
போனதேன் அம்மா....
காற்றுக் கூட நிரப்பமுடியதா
வெற்றிடமானதம்மா உங்கள் நினைவலைகள்...
ஏழு ஏழு ஜென்மங்கள் எடுத்து பிறந்தாலும்
உங்கள் கருவறையில் மீண்டும்
வந்து பிறக்கின்ற் பாக்கியம்
வேண்டும்மம்மா....
தனித்து நின்றபோதும் கம்பீர்ம் குறையாமல்
கடமையைச் செய்தாயேயம்மா
ராஜ தோரனையில் எம்மை ரசிக்க வைத்தாயே அம்மா..
உங்கள் விழுதுகள் நாங்கள்
இன்று விடையின்றி தவிக்கின்றோம் அம்மா...
நொடிப்பொழுதில் நீங்கள் காணமல்
போனது ஏன் அம்மா...
புதுவருடமும் இருளாகி போனதேயம்மா
மீள வழியின்றி மீண்டும் உங்களை
மீட்டு வர வழியும் இன்றி தத்தழிக்கின்றோம் அம்மா...
தீராத நினைவுகளோடு
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம்
வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்
மீளாத்துயரில் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
Forever on our mind, always in our heart. We miss you our dear Amma and Ammama. Yogam, Selvarany and kids