யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் தங்கக்குட்டி அம்மையார் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 21-12-2024
ஒன்பது ஆண்டு காலங்கள் கடந்தாலும்
உங்கள் நினைவு அசைவற்ற ஆழ்கடல் போல் பதிந்திருக்க
நாள் தோறும் உங்களை தேடுகிறோம்
அம்மா
இன்று உங்கள் அரவணைப்பில்லாமல் பொழுதுகள்
வெறுமையாக தோன்றுகின்றதம்மா
வாழ்வில் அடைந்ததை விட
இழந்தது அதிகம்
என்பது போல்
அப்பாவை நாங்கள் இழந்த துயரத்திலும்
நீங்கள் ஒரு கையில் ஈட்டியும்
மறுகையில் கேடயமும் வைத்தாற்போல்
எம்மை காத்ததை எப்படி மறப்போம் அம்மா
நோய்வரும் போது பாயை தேடுவதை விட
இன்றும் நாங்கள் கற்பனையில் அம்மா அம்மா என்று
உங்களை தேடி தவிர்க்கின்றோமம்மா.....
யாவும் சரியாகி விட்டதென நினைத்த தருவாயிலேயே
நீங்கள் எங்களை விட்டு பிரிந்தீர்கள் அம்மா,
அன்று உங்களை மீட்க போராடிய நாங்கள்
இன்று அதிலிருந்து மீள முடியாமல் போராடுகின்றோம் அம்மா
உங்களோடு நாங்கள் சிரித்த நாட்கள் அதிகம் என்பதாலோ
அன்னவோ இப்போது நீங்கள் இல்லை என்று
எங்களை அழவைத்து வேடிக்கை பார்க்கின்றது
எங்களின் விதியம்மா
உங்கள் நினைவுகளோடு
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்
மீளாத்துயரில் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள்
Forever on our mind, always in our heart. We miss you our dear Amma and Ammama. Yogam, Selvarany and kids