Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 05 MAR 1934
மறைவு 01 JAN 2016
அமரர் மயில்வாகனம் தங்கக்குட்டி (சேனாதி)
வயது 81
அமரர் மயில்வாகனம் தங்கக்குட்டி 1934 - 2016 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் தங்கக்குட்டி அம்மையார் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.   

திதி: 02-01-2024

ஆண்டு எட்டு ஆனதம்மா உங்களை
காணாது மனம் வாடுதம்மா
தொலைதூரம் நீங்கள் சென்றாலும் - அம்மா
தொடர வேண்டு உங்கள் அன்பு என்றும்...

தவிக்குதம்மா எங்கள் இதயம் - எங்கள்
தாகம் தீர்க்க வருவீருகளோ?
தெகிட்டாத உங்கள் முத்தம் - இங்கு
தினந்தோறும் கேட்குதமம்மா...

கணமேதும் நிற்காத கடிகார முள்ளாக
தினம் தினம் ஓடி உண்ண உணவு தந்த எங்களம்மா
மணம் வீசும் மலரே மங்காத ஒளியோ
தவம் இன்றி எங்களை பெற்ற வரமே

ஊர் கூடி ஒற்றுமையா தேர் ஒன்றை இழுக்க
நேர் நின்று சீர் செய்த நெறியாளர் நீங்களம்மா
உங்கள் வருகைக்காக கொந்தளிக்கும் எங்கள் நெஞ்சமம்மா
உங்கள் புகைப்படம் ஒன்றே எமக்கிங்கு தஞ்சமம்மா

கண்ணீரில் தவிக்கின்றோம் - ஒருமுறை
கண்ணெதிரே வருவீருகளோ என்று?
காலன் உங்கள் கைப்பிடித்து எங்கு கூட்டிச் சென்றானோ....

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

மீளாத் துயரில் - பிள்ளைகள் , மருமக்கள், பேரப்பிள்ளைகள் , பூட்டப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

Photos