Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 05 MAR 1934
மறைவு 01 JAN 2016
அமரர் மயில்வாகனம் தங்கக்குட்டி (சேனாதி)
வயது 81
அமரர் மயில்வாகனம் தங்கக்குட்டி 1934 - 2016 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகானம் தங்கக்குட்டி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஐந்தானதே அம்மா!
எங்களுக்கு உயிர்தந்த உத்தமியே!
நடமாடும் தெய்வமாய் எங்களை அரசாண்ட மகாலட்சுமியே
அல்லும் பகலுமாய் எங்கள் அத்தனை பேரையும் கண்ணுக்குள்
வைத்து எங்களை காத்து நின்ற தெய்வமே
யாருக்கும் சொல்லாமல் ஓடி மறைந்த மாயமென்ன- தாயே
சிரிக்க மட்டுமே தெரிந்த உன் செந்தாமரை முகத்தில்
எத்தனையோ துயரங்களைச் சிரித்தபடி துரைத்து நின்றாய்
எங்களை சிற்பங்களாய் செதுக்கி வைத்தாய்
முப்பொழுதும் எங்களின் முகம் மலர வைத்த தாயே
இனி எப்பொழுதும் எங்களுக்கு உன்போல் யாருமில்லையே தாயே
அம்மா உன் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கின்றோம்
எப்பொழுதும் எங்களை அணைத்து நிற்க நீ வேண்டுமம்மா
தாளாத சோகங்கள் தேறாத உள்ளமாய் மனம் பரிதவிக்கும்
பாட்டில் உங்களின் ஈர்ப்பலைகள் எங்களை
ஈர்த்துக் கொண்டிருக்கின்றதம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை
வேண்டி நிற்கின்றோம் அம்மா
உங்கள் நினைவுகள் சுமந்து வாடும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.....

தகவல்: குடும்பத்தினர்

Photos