Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 05 MAR 1934
மறைவு 01 JAN 2016
அமரர் மயில்வாகனம் தங்கக்குட்டி (சேனாதி)
வயது 81
அமரர் மயில்வாகனம் தங்கக்குட்டி 1934 - 2016 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகானம் தங்கக்குட்டி அம்மையார் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஆறும் ஆனதம்மா
ஆறிவிடும் எம்துயரம் என நினைத்தோம்
அறுபது ஆண்டுகள் ஆனாலும்
ஆறாது எம் துயரம்

இன்பங்கள் இரட்டிப்பாகும்
துன்பங்கள் தூரவிலகும்
துணையாய் நீங்கள் இருந்தபோது
இன்று துன்பமே எமக்கு துணையாய் போனதம்மா...

மாயப்புயல்வடிவில் காலனன் இன்னுயிர் பறிக்க
சோகத்தை தந்து விட்டு சொல்லாமல்
சென்றதென்னம்மா...
காலனவன் கணக்கில் தப்பென்று சொல்வதா
அல்லது கண்களை குளமாக்க
விதி செய்த விளையாட்டென்று
சொல்வதா தாயே...

விண்ணுலக வாழ்வை வாழ்ந்திட
மண்ணுலக வாழ்வை விட்டு
மிக விரைவாக சென்றீர்களே
அம்மா... ஆனாலும் உங்களுக்கு
இவ்வளவு அவசரமா...??

இறைவன் அழைப்புக்கு இணைந்து இசைந்து சென்று விட்டீர்களே அம்மா
இல்லமது இருட்டாய் போனதம்மா.... இமைகள் நனைய நினைவில்
எம்முடன் நிஜத்தில் இறைவனிடம் கலந்திட்ட உங்கள் ஆத்ம
சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம் அம்மா...

உங்கள் பிரிவில் துயரும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

Photos