யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் தங்கக்குட்டி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா அம்மா நீ எங்கே
பிள்ளைகள் பிள்ளைகள் என்று கூப்பிடும்
உந்தன் இனிய குரல் எங்கள் காதில்
ஒலித்துக்கொண்டே இருக்குதம்மா
தாலாட்ட நீ இல்லை தவிக்கின்றோம் தாயே
எம்மை இவ்வுலகத்திற்கு ஈன்றவளே
எமக்கு உயிர் உதிரம் தந்தவளே
அம்மா உன் உயிர் அனுவில்
சுவாசிக்கிறோம் தாயே
அம்மா அம்மா என் உயிரே
நீ எங்கே! எங்கே உன் இனிய முகம்
உன் அமைதி நிறைந்த கண்கள்
நீ அன்புடன் பேசும் பேச்சு
உன் இரக்கம் கொண்ட உள்ளம்
கனிவும் உந்தன் எண்ணம்
உன்போல் துணை இருப்பார்
உலகில் எமக்கு இல்லை
கனப்பொழுதில் நடந்தது என்ன?
உன் இறுதி மூச்சு காற்றோடு கலந்தது என்ன?
நம்பமுடியவில்லை நடந்தது என்னவென்று
ஆண்டுகள் நான்கு உருண்டு ஓடினாலும்
அலைகடல் அலை அலையாக என்றும்
உங்கள் அன்பு அலை நினைவுகளுடன்
அன்பு தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனை வேண்டி பிரார்த்திக்கின்றோம்!!
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
Forever on our mind, always in our heart. We miss you our dear Amma and Ammama. Yogam, Selvarany and kids