Clicky

பிறப்பு 21 MAY 1968
இறப்பு 03 DEC 2020
அமரர் மதிவதனன் தாமரைச்செல்வி
வயது 52
அமரர் மதிவதனன் தாமரைச்செல்வி 1968 - 2020 நவாலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mathivathanan Thamaraiselvi
1968 - 2020

தாமரைக்காக......... தாமரை எங்கள் இதயத்தில் பூத்த தாமரை மலர் - நேற்று மயக்கம் ,சோர்வு ,தளர்வு படுக்கையில் இருக்கலாம் நிரந்தரம் இல்லை ... வைத்தியசாலை ஒரு பள்ளிக்கூடம் . மாணவர்களை எப்படி புதிய அறிவாளியா உருவாக்குவார்களோ. வைத்தியசாலை - உன் நோய் இன்றி புதிய தாமரையாக மலர செய்வார்கள் - என நம்பினோம். தாமரை .- நீ இருக்கும் இடம் களை கட்டும் . சிரிப்புக்கு பஞ்சம் இல்லை . ஆறு சுவை உணவு இருக்கும் . நலம் பெற்று வந்து விடுவாய் - என நம்பினோம். எங்களுக்காக ... குழல் பிட்டு சூடை மீன் பொரியல் ஒடியல் கூழ் எண்ணில் அடங்கா- உன் கரம் தரும் உணவுகள் . செஞ்சு தர நோயை எதிர்த்து வென்று வந்து விடுவாய் - என நம்பினோம். அம்மா நாளை வருவா - என ஏங்கும் - உன் பிள்ளைகள் . விழி மூடா வழி பார்த்து சோகத்தில் - உன் கணவன் . அன்பாக பழகிய -உன் Best family groups. எல்லோரையும் . காண வந்து விடுவாய் -என நம்பினோம். தாமரை - நீ வர மாட்டய்- என தெரிந்ததும் நம்ப மறுக்கிறது - என் இதயம் - உன் நினைவுகளால் விழிகள் கண்ணீரால் நிரம்பி வழிகிறது. தாமரை.-நீ வெறுக்க முடியாத நட்பான உறவு . மறக்க முடியாத ஞாபகங்களை - என் இதயத்தில் சுமந்து கொண்டு . கண்கள் குளமாகி - உன் பிரிவவை தாங்க முடியாமல் - உன் நினைவால் கண்ணீர் சிந்துகிறது - என் குடும்பம் . மதியண்ணா. தாமரை நேசித்த இதயத்தையும் -நீங்கள் சுவாசித்த உயிரையும் - அந்த நினைவுகளுடன் பயணிக்க என்றும் உங்களோடு . ஆறுதலா என் குடும்பம் . நன்றியுடன் -சகோ- ?கமல்,ஜெயமதி?

Write Tribute

Summary

Notices