மன்னார் நானாட்டான் சூரியகட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மத்தேஸ்பிள்ளை சந்தாம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஓடி மறைந்தாலும் அப்பா உங்கள்
அன்பைத் தேடி அலைகின்றது எம் மனங்கள்
கண்ணின் மணிபோன்று எமைக்காத்த தந்தையே
கண்மூடிவிழிக்கும்முன் கடவுளிடம் சென்றீர்களே!
பாசம்கலந்த கண்டிப்புடன்
பல்கலையும் கற்பித்த எங்கள் குலவிளக்கே
பாரினில்இன்று பரிதவித்து நிற்கின்றோம்
பார்க்கும் இடம் எல்லாம் அப்பா உங்கள் முகம் தெரிகின்றதே!
திரியாய் நீங்கள் எரிந்து எம்வாழ்வை ஒளிர்வித்தீர்கள்
மங்காத மணிவிளக்காய் ஒளிர்கின்றீர்கள் எம்மனங்களில்
இப்பூஉலகை விட்டு விண்ணுலகம் சென்ற அப்பா
உங்களது பிரிவு எம்மை வட்டமிட்டு வாட்டுகின்றது!
உள்ளத்தின் குமுறல்கள் விழிவழியே வடிந்தோட
எண்ணத்தில் உங்கள் நினைவலைகள் வலம் வருகின்றதே
வானம் பூமி காற்று உள்ளவரை
வாழ்ந்திடுவோம் உங்கள் வழிகாட்டலில்!
நித்திய தேவனின் முடிவில்லா வாழ்வில்
நிரந்தர நிம்மதி அடைந்தீர்கள் அப்பா
நிர்க்கதியாக நிற்கின்ற போதிலும்
நித்தமும் உங்கள் நினைவினில் வாழுவோம்!
உங்கள் ஆன்மா இறைவனில் இளைப்பாற
இறைஞ்சி நிற்கின்றோம்!
You have taught us how to live our life fullest by your life
In happy and sorrow in good and bad
We know you are watching over us Appa
You left a legacy and lots of good memories for us
We will walk on the path you showed us
Because your love is imprinted in our hearts
Lovely Appa we miss you so much
You were the best grandfather any grandchild could ask for
Loving, caring, simple, smart and strong
You were the gentle and true husband
We love you until we meet again
May your soul rest in peace
I came to know Late Santhampillai in 1974 working as an Agricultural Instructor In Nuwaraeliya where I was working as a Planning Officer.Since then We maintained a close relationship Whenever I...