2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 NOV 1944
இறப்பு 14 JUN 2019
அமரர் மரிஷால் சவிரி திருச்செல்வம்
வயது 74
அமரர் மரிஷால் சவிரி திருச்செல்வம் 1944 - 2019 நாரந்தனை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரிஷால் சவிரி திருச்செல்வம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு காட்டி எம்மை ஆதரித்து
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயரில் கொண்டு இன்று
ஆண்டு இரண்டு ஆன போதும்
அனுதினமும் நீங்கள் ஆசைந்து திரிந்து
இடமெங்கும் அப்பா உங்கள்
திருமுகம் தோன்றுதிங்கே!

நாம் இந்த மண்ணில் வாழும் வரை
நம் இதய தோட்டத்தில் ஓயாது
பூத்துக் கொண்டிருக்கும் உங்கள்
நினைவுகளை மறக்கத்தான் முடியவில்லை

இருபத்தி நான்கு மாதங்கள பட்டென்று போனதென்ன
பாசமாயிருந்து எம்மையெல்லாம்
பரிதவிக்கவிட்டு நீங்கள் மட்டும்
வானகம் சென்றதென்ன அப்பா

எங்களோடு தான் இருக்கின்றீர்கள்- ஆனால்
உருவத்தை காணவில்லை
மங்காத ஒளிவிளக்காய் ஒளிர்கின்றீர்கள்
எம் உள்ளத்தில் என்றும் அப்பாவாய்!

வாழ்ந்தால் உங்கள் போல்
மாமனிதராய் வாழ வேண்டும்
மங்காமல் உங்கள் பெயரை
நினைவில் வைத்திருப்போம்- எத்தனை
ஜென்மம் ஆனாலும்- உங்கள்
ஆத்மா இளைப்பாற கர்த்தர் அருள் புரிவாராகா

உங்கள் நினைவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
உடன் பிறவாச் சகோதரன் இருதயல் குடும்பம்

தகவல்: குடும்பத்தினர்