Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 JUN 1963
இறப்பு 26 JAN 2018
அமரர் மகாலிங்கம் செல்வகுமார் (சுவிஸ் குமார்)
வயது 54
அமரர் மகாலிங்கம் செல்வகுமார் 1963 - 2018 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி :  06-02-2025

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் செல்வகுமார் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆயிரம் பிறவி எடுத்தாலும் உங்களை இழந்த துயர்
மனதை விட்டு நீங்காது !!!
ஈருயிர் ஓருயிராக இணைந்து வாழ்ந்தோம்

 தனியனாய் தவித்தின்று எப்பிறவியில்
உங்களை நான் இனி காண்பேன் என
எண்ணி ஏங்குகின்றேன்...

அன்பு பண்பு பாசத்தோடு நல்ல கணவராய்
 வாழ்ந்த வாழ்கையை எண்ணி
 மனம் மாய்ந்து துன்பத்தில் துவண்டு துவள்கிறேன்...

  அப்பா உங்கள் பிள்ளைகளாக பிறந்தநாள்
 முதலாக உங்கள் பாசமுகம் பார்த்திருந்தோம்
எம் ஆசை அப்பாவே உங்களோடு எம்
வாழ்நாள் முழவதும் இணைந்து வாழ்வோமென
 மகிழ்ந்திருந்தோம்...

எங்கள் பாசவலையறுத்து பாதியிலே பிரிந்து
 சென்றீர்கள் என உருகி உள்ளம் வெதும்பியே
கதறுகின்றோம் அப்பா..

வையத்தில் நீங்கள் வாழ்ந்தபோது வாழ்வெமக்கு
வசந்தமாய் ஆனது வானுறையும் தெய்வத்துள்
கலந்தபோது வாழ்வே எமக்கு கசந்து விட்டது
 தரணியில் உங்களுக்கு இணையாருமில்லை
 தவிக்கின்றோம் உங்கள் பாசம் பரிவு ஏதுமின்றி

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.!!!

தகவல்: குடும்பத்தினர்