Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 JUN 1963
இறப்பு 26 JAN 2018
அமரர் மகாலிங்கம் செல்வகுமார் (சுவிஸ் குமார்)
வயது 54
அமரர் மகாலிங்கம் செல்வகுமார் 1963 - 2018 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் செல்வகுமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஐம்பது நான்கு வயதினிலே அரையாண்டு முடியும் முன்னே
ஐம்புலன்களையும் அடக்கிவிட்டான் அந்த இறைவன்
மூன்று ஆண்டுகள் சென்றுவிட்டன
ஆனாலும் அடங்கவில்லை எங்கள் துயரங்கள்

வாழ்க்கை என்பது சிறியது வசந்தகாலம் வரும்போது
வலிக்க வலிக்க வாரி அணைத்துக் கொண்டான் இறைவன்
வாழ்விழந்து வலிதாங்க முடியாமல் துடிக்கின்றேன்
வாழ்நாள் முழுவதும் புழுவாக துடிக்கின்றோம்

வையகத்தில் மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்
மிகுதி வாழ்விற்கும் உறவாக நீங்கள் வேண்டும்
மண்ணுலகில் மகனாக உங்கள் பிள்ளைகளுக்கு
மறு உயிர் தாருங்கள்

மீண்டும் ஒருமுறை எம் கண்முன்னே
உங்கள் சிரிப்பான முகத்தை பார்க்க வேண்டும்
ஆலமரம் வேர் சாய்ந்து விழுந்துவிட்டால்
அந்த மரத்தடிக்கு யார் வருவார்கள்?

ஆயிரம் ஆயிரம் உறவுகளுக்கு
ஆதரவுக் கரம் நீட்டினீர்கள்
உற்றார், உறவினருக்கும் உதவியாய்
உன்னதமான மனிதராய் வாழ்ந்தீர்கள்

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..  


தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos